Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அதானியின் ஐந்து நிறுவனங்களில் பங்குகளைக் குறைத்த GQG Partners

அதானியின் ஐந்து நிறுவனங்களில் பங்குகளைக் குறைத்த GQG Partners

ஹிண்டன்பர்க் விவகாரத்தைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யத் தொடங்கிய ஜிக்யூஜி, இந்தியப் பங்குகளில் முதலீட்டைக் குறைத்து வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

ராஜீவ் ஜெயின் தலைமையிலான அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஜிக்யூஜி பார்ட்னர்ஸ், செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் அதானி குழுமத்தின் ஐந்து நிறுவனங்களில் தனது பங்கு முதலீட்டைக் குறைத்துள்ளது.

அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் பங்குகள் குறைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸில் பங்குப் பிடிப்பு 4.14 சதவீதத்திலிருந்து 1.71 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜியில் 3.82 சதவீதத்திலிருந்து 3.23 சதவீதமாகவும், அதானி பவரில் 4.32 சதவீதத்திலிருந்து 3.94 சதவீதமாகவும் சரிந்துள்ளது.

அதானி போர்ட்ஸில் கோல்ட்மேன் சாக்ஸ், ஜிக்யூஜி நிதியின் பங்கு 1.93 சதவீதத்திலிருந்து 1.72 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸிலும் முதலீடு குறைக்கப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் விவகாரத்தைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யத் தொடங்கிய ஜிக்யூஜி, அண்மைக்காலமாக இந்தியப் பங்குகளில் முதலீட்டைக் குறைத்து வருகிறது. நடப்புக் காலாண்டில் ஐடிசி நிறுவனப் பங்குகளையும் சுமார் ரூ.9,400 கோடிக்கு விற்றுள்ளது. நிறுவனங்களின் பங்குதாரர் விவரங்களை அடிப்படையாகக் கொண்ட ஏஸ் ஈக்விட்டி தரவுகளில் இந்த மாற்றங்கள் பதிவாகியுள்ளன.

முந்தைய செய்தி
பெரிய நகை விற்பனையாளர்களுக்கு வலுசேர்க்கும் சிறு நிறுவனங்கள்
அடுத்த செய்தி
ஹேவல்ஸ் இந்தியா Q2 லாபம் ரூ.349 கோடியாக உயர்வு

தொடர்புடைய செய்திகள்